அகர வரிசை சொற்கள் | Agara Varisai Sorkal in Tamil
ஒரு மொழியை இலகுவாக கற்பதற்கு அதனுடைய எழுத்துக்கள் மிகவும் இன்றியமையாதது. அதன் பொருட்டு ஒவ்வொரு மொழியிலும் அந்த எழுத்துக்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களும், உயிர்மெய் எழுத்துக்களும் வரிசையாக சொற்கள் அல்லது வாக்கியங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.
அகரவரிசை என்றால் என்ன?
அகரவரிசை என்பது ஒரு மொழியில் உள்ள எழுத்துக்கள் வரிசையின் அடிப்படையில் சொற்கள் அல்லது வாக்கியங்களாக வரிசைப்படுத்தி கற்பதற்கு எளிமையாக தொகுப்பதே ஆகும்.
அதாவது எளிமையாக உங்களுக்கு விளக்க வேண்டும் என்றால் தமிழ் இலக்கியமான ஆத்திச்சூடி இல் உள்ள வாக்கியங்கள் உயிர் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு வரிசை படுத்தப்பட்டுள்ளன. தமிழ் நீதிநூல்களில் ஒன்று ஔவையாரின் ஆத்திசூடியும் ஆகும்.
இந்த பதிவில் அகர வரிசையிலான சொற்களை பற்றி தெரிந்துகொள்வோம்.
தமிழின் அகர வரிசை அமைந்த முறை
- உயிரெழுத்துக்களான அ, ஆ, இ, ஈ, உ, ஊ , எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ முதலான 12 எழுத்துக்கள்.
- ஆயுத எழுத்தான ஃ.
- மெய்யெழுத்துகளான க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் வரையான 18 எழுத்துக்கள்.
- உயிர்மெய் எழுத்துகளான க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ழ, ள, ற, ன வரிசையாலான 216 எழுத்துக்கள்.
மேலும் அறிய: க முதல் ன வரிசை சொற்கள் | Uyirmei Eluthukkal in Tamil
தமிழ் அகர வரிசை சொற்கள் | Alphabetical Order in Tamil
அ ஆ இ ஈ வரிசை சொற்கள்
எழுத்து | அகர வரிசை சொற்கள் |
அ | அன்பு, அம்மா, அருவி, அக்கா |
ஆ | ஆடு, ஆலை, ஆல், ஆற்றல் |
இ | இடம், இலை, இயற்கை, இளம் |
ஈ | ஈரம், ஈயப்பசை, ஈட்டி, ஈச்சமரம் |
உ | உலகம், உயிர், உதவி, உப்பு |
ஊ | ஊஞ்சல், ஊமை, ஊரகம், ஊதல் |
எ | எண்ணெய், எலி, எட்டு, எறும்பு |
ஏ | ஏழை, ஏரி, ஏற்கனவே, ஏற்ப்பாடு |
ஐ | ஐந்து, ஐயோ, ஐம்பது, ஐக்கியம் |
ஒ | ஒலி, ஒளி, ஒன்பது, ஒட்டகம் |
ஓ | ஓசை, ஓமம், ஓகை, ஓங்காரம் |
ஔ | ஔவையார், ஔதர், ஒளடதம், ஒளவியம் |
ஔவையாரின் ஆத்திசூடி – அ ஆ இ ஈ வரிசை சொற்கள்
அவ்வையாரின் ஆத்திச்சூடி தமிழ் இலக்கியத்தின் நீதி நூலாகும்.
சிறுவர்கள் இளம் வயதிலேயே ஆத்திச்சூடியைபடிக்கிறார்கள். இதன் மூலம் தமிழில் உள்ள அகர வரிசை எழுத்துக்களை அறிவதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கும் நீதி நெறிமுறைகளையும் இது பயிற்றுவிக்கிறது.
- அறம் செய விரும்பு.
- ஆறுவது சினம்.
- இயல்வது கரவேல்.
- ஈவது விலக்கேல்.
- உடையது விளம்பேல்.
- ஊக்கமது கைவிடேல்.
- எண் எழுத்து இகழேல்.
- ஏற்பது இகழ்ச்சி.
- ஐயம் இட்டு உண்.
- ஒப்புரவு ஒழுகு.
- ஓதுவது ஒழியேல்.
- ஔவியம் பேசேல்.
- அஃகஞ் சுருக்கேல்.
அகர வரிசை சொற்கள் – க் ங் ச் வரிசை சொற்கள்
எழுத்து | அகர வரிசை சொற்கள் இன் தமிழ் |
க் | தக்காளி |
ங் | சங்கு |
ச் | தச்சர் |
ஞ் | மஞ்சள் |
ட் | பட்டம் |
ண் | கண் |
த் | அத்தை |
ந் | பந்து |
ப் | அப்பளம் |
ம் | அம்மா |
ய் | நாய் |
ர் | நார் |
ல் | பல் |
வ் | செவ்வந்தி |
ழ் | குமிழ் |
ள் | தேள் |
ற் | நாற்று |
ன் | அன்னம் |
மேலும் அறிய: Top 10 Scientists of India in Tamil | இந்திய விஞ்ஞானிகள் பட்டியல்
அகர வரிசை வாய்ப்பாடு
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | |
க் | க | கா | கி | கீ | கு | கூ | கெ | கே | கை | கொ | கோ | கௌ |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ |
ச் | ச | சா | சி | சீ | சு | சூ | செ | சே | சை | சொ | சோ | சௌ |
ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ |
ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ |
ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ |
த் | த | தா | தி | தீ | து | தூ | தெ | தே | தை | தொ | தோ | தௌ |
ந் | ந | நா | நி | நீ | நு | நூ | நெ | நே | நை | நொ | நோ | நௌ |
ப் | ப | பா | பி | பீ | பு | பூ | பெ | பே | பை | பொ | போ | பௌ |
ம் | ம | மா | மி | மீ | மு | மூ | மெ | மே | மை | மொ | மோ | மௌ |
ய் | ய | யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ |
ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ |
ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ |
வ் | வ | வா | வி | வீ | வு | வூ | வெ | வே | வை | வொ | வோ | வௌ |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழொ | ழௌ |
ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளே | ளே | ளை | ளொ | ளோ | ளௌ |
ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ |
ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
Agara varisai letters in Tamil
க கா கி கீ வரிசை சொற்கள்
எழுத்து | அகர வரிசை சொற்கள் |
க | கண்ணாடி, கரும்பு |
கா | காகம், காடு |
கி | கிளி, கிண்ணம் |
கீ | கீரி, கீரை |
கு | குழந்தை, குரங்கு |
கூ | கூடு, கூண்டு |
கெ | கெளிறு, கெண்டி |
கே | கேழ்வரகு, கேடயம் |
கை | கை, மல்லிகை |
கொ | கொக்கு, கொடுமை |
கோ | கோழி, கோலம் |
கௌ | கௌதாரி, கௌளி |
Agara Varisai Words in Tamil
ச முதல் சௌ வரிசை சொற்கள்
எழுத்து | அகர வரிசை சொற்கள் |
ச | சர்க்கரை, சக்கரம் |
சா | சாவி, சாட்டை |
சி | சிரிப்பு, சிறுத்தை |
சீ | சீத்தாப்பழம், சீப்பு |
சு | சுவர், சுரைக்காய் |
சூ | சூரியன், சூறாவளி |
செ | செவ்வகம், செங்கல் |
சே | சேவல், சேமிப்பு |
சை | சைவம், சைகை |
சொ | சொல், சொம்பு |
சோ | சோளம் சோம்பு |
சௌ | சௌ சௌ, சௌகரியம் |
Tamil Agara Varisai
த தா தி தீ வரிசை சொற்கள்
எழுத்து | அகர வரிசை சொற்கள் |
த | தங்கம், தவளை |
தா | தாய், தாள் |
தி | திமிங்கலம், திங்கள் |
தீ | தீவு, தீப்பெட்டி |
து | துளி, துடைப்பம் |
தூ | தூண், தூண்டில் |
தெ | தென்னை, தெற்கு |
தே | தேன், தேநீர் |
தை | தையல், தைலம் |
தொ | தொலைபேசி, தொலைக்காட்சி |
தோ | தோட்டம், தோசை |
தௌ | தௌதம், தௌவை |
Agara Varisai sorkal tamil
ப பா வரிசை சொற்கள்
எழுத்து | அகர வரிசை சொற்கள் |
ப | பட்டு, பலகை |
பா | பாடல், பாக்கு |
பி | பிட்டு, பிடிக்கும் |
பீ | பீடம், பீரங்கி |
பு | புகைப்படம், புயல் |
பூ | பூமி, பூஜை |
பெ | பெருமை, பெண் |
பே | பேட்டி, பேத்தி |
பை | பையன், பைசா |
பொ | பொருள், பொக்கிஷம் |
போ | போர், போட்டி |
பௌ | பௌர்ணமி, பௌதிகம் |
அகர வரிசை சொற்கள்
ம மா மி மீ வரிசை சொற்கள்
எழுத்து | அகர வரிசை சொற்கள் |
ம | மயில், மலர் |
மா | மாதம், மாவிலை |
மி | மிருகம், மின்னல் |
மீ | மீன், மீசை |
மு | முத்து, முட்டை |
மூ | மூக்கு, மூளை |
மெ | மெய், மெழுகு |
மே | மேகம், மேசை |
மை | மைனா, மைதா |
மொ | மொட்டு, மொழி |
மோ | மோர், மோதிரம் |
மௌ | மௌவல், மௌனம் |
மேலும் அறிய: 50+ கடி ஜோக்ஸ் விடுகதைகள் தமிழ் | Mokka Jokes in Tamil
அகர வரிசை சொற்கள் tnpsc
வ வா வி வரிசை சொற்கள்
எழுத்து | அகர வரிசை சொற்கள் |
வ | வட்டம், வண்டு |
வா | வாசல், வாடகை |
வி | விடுதலை, விண்வெளி |
வீ | வீடு, வீணை |
வு | கதவு |
வூ | கருவூலம் |
வெ | வெட்கம், வெடிப்பு |
வே | வேங்கை, வேடம் |
வை | வைப்பு, வைபவம் |
வொ | ஒவ்வொருவரும் |
வோ | திருவோடு |
வௌ | வௌவால் |
மேலும் அறிய: தமிழ் பழமொழிகள் | Tamil Proverbs in tamil