உயிர் எழுத்துக்கள் | Tamil Uyir Eluthukkal

எழுத்து என்றால் என்ன?
பேச்சின் மறுவடிவமே எழுத்து. பழங்காலத்தில் இருந்தே எழுத்துக்கள் இருந்துள்ளன என்பதற்கு சான்றுகள் பல உள்ளன. எழுத்து என்றால் ஓவியம் என்று பொருள். எழுத்துக்களின் தோற்றத்திற்கு முதல் அடிப்படை ஓவியங்களேயாகும்.
மேலும் அறிய: உணவே மருந்து திருக்குறள்
எழுத்துக்களின் வகைகள் | Types of Tamil Letters
எழுத்துக்களை முதல் எழுத்துகள் மற்றும் சார்பு எழுத்துக்கள் என இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.
முதல் எழுத்துக்கள்
சார்பு எழுத்துக்கள்
- உயிர்மெய் எழுத்துக்கள்
- ஆயுத எழுத்து
உயிர் எழுத்துக்கள் 12 | Uyir Ezhuthu in Tamil
தமிழின் அடிப்படை எழுத்துக்களான அ முதல் ஒள வரை உள்ள எழுத்துகள் உயிர் எழுத்துகளாகும். இதில் மொத்தம் 12 எழுத்துக்கள் உள்ளது. இந்த எழுத்துக்கள் உச்சரிப்பதற்கு எளிமையாகவும், இனிமையாகவும் இருக்கும்.
உயிர் எழுத்துக்களின் வகைகள்
உயிர் எழுத்துகள் இரண்டு வகைப்படும்.
1. குறில் எழுத்துகள்
குறைந்த அளவு நேரமே ஒலிக்கும் எழுத்துக்கள் குறில் எழுத்துக்கள் எனப்படும்.
அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறுகி ஒளிப்பதால் இது குறில் எழுத்து அல்லது குற்றெழுத்து என்று அழைக்கப்படுகிறது.
2. நெடில் எழுத்துகள்
நீண்டு ஒலிக்கும் எழுத்துக்கள் நெடில் எழுத்துக்கள் எனப்படும்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழு எழுத்துகளும் நெடில் எழுத்துகள் அல்லது நெட்டெழுத்துக்கள் என்று அழைக்கப்படுகிறது.
தமிழ் உயிர் எழுத்துக்கள் | Uyir Eluthukkal Words and Tamil Uyir Eluthukkal Chart
|
எழுத்து |
சொல் |
பெயர் |
| அம்மா |
அகரம் |
|
| ஆடு |
ஆகாரம் |
|
| இலை |
இகரம் |
|
| ஈட்டி |
ஈகாரம் |
|
| உரல் |
உகரம் |
|
| ஊஞ்சல் |
ஊகாரம் |
|
| எலி |
எகரம் |
|
| ஏ | ஏணி |
ஏகாரம் |
| ஐ | ஐந்து |
ஐகாரம் |
| ஒட்டகம் |
ஒகரம் |
|
| ஓடம் |
ஓகாரம் |
|
|
ஒளவையார் |
ஔகாரம் |
மேலும் அறிய: 10 பிரபலமான திருக்குறள்
